Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டித்தால் 21 இலட்சம் பரிசு என பகிரங்க அறிவிப்பு!

In இந்தியா
Updated: 12:12 GMT, Nov 22, 2017 | Published: 07:29 GMT, Nov 22, 2017 |
0 Comments
1286
icon_com
This post was written by : Puvanes
abdulla001

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டித்தால் 21 இலட்சம் இந்திய ரூபா பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பரூக் அப்துல்லா அண்மையில், பாகிஸ்தானிடம் இருந்து ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் நிலப்பகுதி, இந்தியாவின் மூதாதையருக்கு உரித்தான சொத்து இல்லை என்ற கருத்தோடு, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தேசிய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியில் தலைவரான விரேஷ் சாண்டில்மா நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையின் ஊடாகவே மேற்குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பரூக் அப்துல்லா நம் நாட்டை அவமதித்துள்ளார் என விரேஷ் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அவருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் பாதுகாப்பினை மத்திய அரசு உடனடியாக ரத்துச் செய்து, அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நாக்கு துண்டிப்பு அறிவிப்பானது கடும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளதோடு பல்வேறு மட்டங்களில் இருந்தும் அதற்கு எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg