Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக மரப்பலகை ஏற்றிச் சென்ற நபர் வெலிமடை பொலிஸாரால் கைது

In இலங்கை
Published: 07:49 GMT, Nov 22, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Elakkiya

சட்டவிரோதமாக ‘கிரான்டிஸ்’ மரப்பலகை ஏற்றிச் சென்ற நபர் வெலிமடை குருத்தலாவ பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிமடை குருத்தலாவ பகுதியில் இருந்து வெலிமடை நகர பகுதிக்கு அனுமதி பத்திரம் இன்றி மரப்பலகையை ஏற்றிச் சென்ற நிலையிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மரப்பலகைகள் சுமார் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான பெறுமதி உடையவை என பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட லொறியும் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Photo (2) Photo (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg