Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவிற்கு புதிய சிக்கல்! – மறைக்கப்பட்ட கோடிகளின் விபரங்கள் அம்பலமாகின

In இந்தியா
Published: 08:10 GMT, Nov 22, 2017 |
0 Comments
3467
icon_com
This post was written by : Puvanes

சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டில் பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சிறைச்சாலைக்குள் தனி அறையில் வைத்து விசாரணைகள் நடத்த வருமான வரித்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

அண்மையில் சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது 7 கோடி பணம், 5 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 1430 கோடிகள் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றில் பல போலியானவை எனவும் கண்டு பிடிக்கப்பட்டது.

அதேபோன்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள சசிகலாவின் 4 அறைகளிலும் நடத்திய சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட பல  சிக்கியுள்ளன.

இவற்றினை அடிப்படையாகக் கொண்டு வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளனர்.

குறித்த விசாரணைகளை இன்று முதல் தொடர்ந்து 3 தினங்களுக்கு பெங்களூர் பரப்பன சிறையில் தனி அறையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடைபெறும் நேரங்கள் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால் அதனால் விசாரணைகள் பாதிக்கப்படும் என்பதால் இதுவரையிலும் விசாரணைகள் நடத்தப்படும் நேரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

எனினும், வருமான வரித்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் சசிகலாவை சிறைச்சாலையில் திடீர் விசாரணைகளில் முடக்குவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg