Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாள்வெட்டுக் குழுவினருடன் தொடர்புடையவருக்கு விளக்கமறியல் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 08:21 GMT, Nov 22, 2017 |
0 Comments
1702
icon_com
This post was written by : Varshini

வாள்வெட்டுக் குழுவினருக்கு உளவாளியாக செயற்படுபவரென சந்தேகத்தில்  கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெள்ளைவான் பீதியில் யாழ். மக்கள் : ஒருவர் கைது

வாள்வெட்டுக் குழுவினருக்கு உளவாளியாக செயற்படுபவரென சந்தேகிக்கப்பட்ட ஒருவரை கைதுசெய்வதற்காக, யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வெள்ளை வானில் வந்ததால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ். ராமநாதன்வீதிப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்த இளைஞன், யாழ். பேரூந்து நிலையத்தின் முன்பாக நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளைவானில் சிவில் உடையில் வந்த கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன், வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்துள்ளார்.

இவரை கைதுசெய்ய பலதடவை முயற்சித்த போதிலும், பொலிஸ் வாகனங்களைக் கண்டு மறைந்துவிடுவதாக குறிப்பிட்ட கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதனாலேயே வானை பயன்படுத்தி சிவில் உடையுடன் வந்து கைதுசெய்ததாக குறிப்பிட்டார்.

மேலும், சந்தேகநபரின் வீட்டை இன்று (புதன்கிழமை) காலை சோதனையிட்ட போது வாளும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதோடு, விசாரணையின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்படவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg