Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீது புதிய பொருளாதாரத்தடை

In
Published: 08:30 GMT, Nov 22, 2017 |
0 Comments
1273
This post was written by : Suganthini
us11

வடகொரியாவை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத்தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை சேர்த்துள்ளதுடன், அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத்;தடைகளை விதிக்கவுள்ளதாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, வடகொரியா மீது புதிய பொருளாதாரத்தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா முன்வைத்துள்ளது.

வடகொரியாவுடன் பல கோடி ரூபாய் பெறுமதியான வர்த்தகத்தொடர்பு வைத்துள்ள 13 நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் வடகொரியாவுக்கு எதிராக அணுசக்தித்திட்ட கட்டுப்பாடுகளை தவிர்க்க உதவுகின்றதாகவும் இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg