Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும்: கம்மன்பில

In இலங்கை
Updated: 10:43 GMT, Nov 22, 2017 | Published: 09:30 GMT, Nov 22, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Ravivarman
Udaa

பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாத்தளை பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தத்தின்போது பிரபாகரனைப் பார்த்துப் பயந்ததைவிட தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் நடவடிக்கைகளைப் பார்த்தே பயப்பட வேண்டியிருக்கின்றது.

அத்துடன், உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாகவே இவர்களுக்கு ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளது.

மேலும் இவர்களைப்போல் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை. வவுனியாவில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றிற்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படவில்லை” என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg