Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக மணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்த இடம் முற்றுகை

In இலங்கை
Updated: 10:45 GMT, Nov 22, 2017 | Published: 10:42 GMT, Nov 22, 2017 |
0 Comments
1050
icon_com
This post was written by : Elakkiya
DSC_0009

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்மித்த காயான்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆற்றுமணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் சுமார் 50 டிப்பர் ஆற்றுமணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மணல் ஏற்றப்பட்ட நிலையில் டிப்பர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

களஞ்சியப்படுத்தப்பட்ட மணலின் ஒரு பகுதி அருகிலுள்ள இடங்களுக்கு இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாலை வேளை டிப்பர் வாகனங்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில் ஆற்றுமணல் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்ற நிலையில் அது தொடர்பில் முறைப்பாடுகள் வழங்கப்படுகின்ற போதிலும் அதிகாரிகள் மந்தகதியிலேயே நடவடிக்கை எடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

DSC_0006

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg