Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய இராணுவம் படைத்துள்ள புதிய உலக சாதனை!

In இந்தியா
Published: 11:41 GMT, Nov 22, 2017 |
0 Comments
1393
icon_com
This post was written by : Puvanes

இந்திய இராணுவத்தினரால், ஒரு மோட்டார் சைக்கிளில் 58 பேர் ஒன்றாக சவாரி செய்து புதிய உலக சாதனை ஒன்றினைப் படைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் இந்திய இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் காட்சிப்பிரிவு அணியானது இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் அமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து 1.2 கிலோ மீற்றர் துரம் வரையிலும் பயணம் செய்து இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

கின்னஸ் சாதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனையானது தொடர்ந்து 6 மாதங்கள் பயிற்சியின் பின்னர் 3ஆவது தடவையாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு 54 பேர் ஒரே மோட்டார் வண்டியில் பயணம் செய்து சாதனை படைத்தனர். அந்தச் சாதனையானது 2013 ஆம் ஆண்டு 56 பேர் கொண்ட குழு ஒன்றினால் முறியடிக்கப்பட்டது.

அதன் பின்னர் தற்போது இந்திய இராணுவப்பிரிவு 58 பேர் என்ற எண்ணிக்கையில் பயணம் செய்து முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg