Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதாரத் திட்டங்களுக்கு உதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி!

In இலங்கை
Updated: 14:13 GMT, Nov 22, 2017 | Published: 14:13 GMT, Nov 22, 2017 |
0 Comments
1304
This post was written by : Ravivarman

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முழுமையான ஆதரவை வழங்குமென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் Wencai Zhang தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

2018 – 2022 காலப்பகுதியின் உதவியாக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான தொகையை ஒதுக்கியுள்ளது.

அத்துடன், இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 50 வருட கூட்டுறவை நினைவுகூரும் வகையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Wencai Zhang 50 வருட பங்குடைமை தொடர்பான நூலின் பிரதியொன்றை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பர்ணாடோ, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Sri Widowati தேசிய பொருளாதார பேரவையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரகோன், ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி சரத் ராஜபத்திரன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg