Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய வைத்தியத்துறை தொடர்பான 2017 கண்காட்சி மற்றும் மாநாடு ஆரம்பம்!

In இலங்கை
Published: 15:28 GMT, Nov 22, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Ravivarman

தேசிய வைத்தியத்துறை தொடர்பான சர்வதேச கண்காட்சியும் மாநாடும் நாளை (வியாழக்கிழமை) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இன்று (புதன்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய வைத்தியத்துறை முறைகள் குறித்தும் ஏனைய வைத்தியத்துறைகள் தொடர்பான பாவனை, மற்றும் மேம்பாடு குறித்தும் புதிய கண்டுபிடிப்புக்கள் குறித்தும் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக இந்த மாநாடு நாளை பத்தரமுல்லயில் உள்ள வோட்டஸ் எட்ஜில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை காலை இது தொடர்பிலான ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், இக்கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நிறைவடையவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிறைவு வைபவம் இடம்பெறவுள்ளது.

சர்வதேச ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனங்களும் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனதுடன், ஒவ்வொரு நாளும் சுதேச வைத்தியமுறை தொடர்பாக ஒவ்வொரு நாடுகளும் அது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் கூட்டத்தொடரும் இடம்பெறவுள்ளது’ என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg