Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வம்சாவளியினரின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட வேண்டும்: லக்ஸ்மன் கிரியெல்ல

In இலங்கை
Published: 15:37 GMT, Nov 22, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Ravivarman
image_1456887746-a294ecddfa

மலையக மக்களும் இந்நாட்டின் மக்களே எனவே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியது எமது பொறுப்பாகும் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் பொருளாதாரத்திற்காகப் பாடுபடும் பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படவேண்டும். இந்திய வம்சாவளியினர் இலங்கையர்களாக மாறிவிட்டனர். எனவே நாம் அவர்களை ஏற்றுக்கொண்டு எமது பொறுப்புகளைச் செய்ய வேண்டும்.

இதனடிப்படையில், அம்மக்களுக்கு இலவசமாக 07 பேர்ச் காணியும் வீடும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என நான் அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனை மலையக அமைச்சர்களுடன் இணைந்து முன்னெடுப்பேன்” என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg