Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா விஜயம்!

In இலங்கை
Published: 16:13 GMT, Nov 22, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Vithushagan
Maithiripala Srisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 28ஆம் திகதி தென்கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே  இன் அழைப்பை ஏற்றே  ஜனதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் கொரியாவுக்கிடையில் நிலவும் 40 வருடகால இருதரப்பு தொடர்பை கொண்டாடும் வகையில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த விஜயத்தில் கொரிய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பொருளாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு ஆகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg