Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதற்கு தயங்காதீர்கள்: ஜெயக்குமார் வலியுறுத்தல்!

In இந்தியா
Updated: 06:02 GMT, Nov 23, 2017 | Published: 06:02 GMT, Nov 23, 2017 |
0 Comments
1189
This post was written by : Kemasiya

கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்கள், தயக்கமின்றி முறைப்பாடுகளை தாக்கல் செய்ய வேண்டும் என, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கந்துவட்டியினால் தொடர்ச்சியாக மரணங்கள் சம்பவித்து வரும் நிலையில், நேற்று (புதன்கிழமை), சென்னையில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜெயக்குமார், மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

மேலும் தெரிவித்த அவர்,

கந்துவட்டியினால் பாதிக்கப்பட்ட மக்கள், உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டும். அத்துடன் கூடுதல் வட்டி பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதன் போது அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், கந்து வட்டிக்கு பணம் வாங்கி, அதை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந் நிலையில் கந்துவட்டி தொடர்பில் அமைச்சர் ஜெயக்குமார் செவ்வி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg