Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக முஸ்லிம் இளைஞன்!

In இலங்கை
Published: 05:43 GMT, Nov 23, 2017 |
0 Comments
2202
icon_com
This post was written by : Varshini
aava

ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக முஸ்லிம் இளைஞன் ஒருவர் செயற்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொலிஸார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த விசாரணைகளின் போது 22 வயதுடைய இக்ரம் என்ற இளைஞன் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்ட கஜபாலசிங்கம் நிதர்சன் எனும் இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஆவா குழு தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். குறித்த தகவல்களின் பிரகாரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg