Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனுஸ் தடுப்பு முகாமிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்: அவுஸ்ரேலிய பிரதமர்

In
Updated: 10:21 GMT, Nov 23, 2017 | Published: 05:54 GMT, Nov 23, 2017 |
0 Comments
1287
icon_com
This post was written by : Risha

பப்புவா நியூ கினியாவிலுள்ள மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் அனைவரையும் வெளியேறுமாறு அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் கென்பராவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், மனுஸ் தடுப்பு முகாம் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ளவர்கள் அனைவரும் வெளியேறி வழங்கப்பட்டுள்ள மாற்று விடுதிக்கு செல்ல வேண்டும்.

அவர்கள் பப்புவா நியூ கினியாவின் சட்டபூர்வமான அதிகாரிகளின் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். மாற்று விடுதியில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான உணவு, நீர், பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவைகள் என அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பப்புவா நியூ கினியாவின் சட்டபூர்வ வழிகாட்டுதல்களுக்கு இணங்கி, மிகவும் அமைதியான முறையில் மனுஸ் தடுப்பு முகாமிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மனுஸ் தடுப்பு முகாம் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் மூடப்பட்ட நிலையில், தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக சுட்டிக்காட்டி, நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg