Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணேசபுரத்தில் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டித்து கண்டனப் பேரணி

In இலங்கை
Published: 07:14 GMT, Nov 23, 2017 |
0 Comments
1387
icon_com
This post was written by : Elakkiya

வவுனியா கணேசபுரம் பகுதியில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

கணேசபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என பலரும் இணைந்து நடத்திய இந்த கண்டனப் பேரணி, வவுனியா, கணேசபுரம் ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு குழுமாட்டு சந்தி வீதி வழியாக நெளுக்குளம் பொலிஸ் நிலையம் வரை சென்றதுடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது கண்டனப் பேரணியில் கலந்து கொண்டிருந்த மக்களை சந்தித்து கலந்துரையாடிய வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.குமாரசிங்க சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு நீதியை பெற்றுத் தருவதாகவும் குறித்த பகுதியில் இடம்பெறும் இளைஞர்கள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 14 ஆம் திகதி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரை பொலிஸார் தேடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

IMG_9693 IMG_9787 IMG_9764 IMG_9828

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg