Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருமகனை கொலை செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

In இலங்கை
Published: 07:22 GMT, Nov 23, 2017 |
0 Comments
1164
icon_com
This post was written by : Varshini
saja-Krao-campaign-sentenced-to-life-imprisonment-for-11-murders-accused

யாழ்ப்பாணத்தில் மருமகனை கத்தியால் குத்தி படுகொலை செய்த மாமனாருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

அத்தோடு, 10 ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்தத் தவறினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தங்கராஜா சரத்பாபு என்பவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.

குறித்த கொலை தொடர்பாக, கொலையுண்டவரது மனைவியின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் தீர்ப்பு நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்ட நிலையில், முதலாவது எதிரிக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அத்தோடு, இரண்டாம் எதிரிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். அத்துடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்த வேண்டும். மூன்றாம் எதிரி கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

வழக்குத் தொடுநர் தரப்பு விசாரணைகளை அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். எதிரி தரப்பு விசாரணைகளை சட்டத்தரணி வி.திருக்குமரன் நெறிப்படுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg