Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை!

In இலங்கை
Updated: 08:17 GMT, Nov 23, 2017 | Published: 07:54 GMT, Nov 23, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Vithushagan
APTOPIX Sri Lanka War Anniversary

இராணுவத்திலிருந்து  தப்பியோடிய   வீரர்களை  கைது செய்வதற்காக   நடவடிக்கைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் சட்டரீதியான விலகிக்கொள்ள வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதியில் இருந்து அமுலில் இருந்த பொது மன்னிப்புக் காலத்தில் 11,232 பேர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர்.

இவர்களில் 15 அதிகாரிகளும் 9 கெடேட் அதிகாரிகளும் அடங்குகின்றனர். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மேலும் 26,000 பேரை கைது செய்ய இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg