Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறுகிய அரசியல் நோக்கங்களுடன் செயற்படுபவர்களை தோற்கடிக்க தயார்: ஐ.தே.க

In இலங்கை
Published: 08:22 GMT, Nov 23, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Vithushagan
unp_96964dw

குறுகிய அரசியல் நோக்கங்களுடன் செயற்படும் எந்த சக்தியாக இருந்தாலும் அதனை தோற்கடிக்க தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக்கட்சி   தெரிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி   வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும்,  தேர்தல் என்பது மக்களின் உரிமை என்பதால் அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

பல்வேறு நோக்கங்களுக்காக எவராவது மக்களின் ஜனநாயக உரிமையை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக மக்கள் சார்பான செயற்பாடுகளை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயங்காது.

மக்களுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை தோற்கடித்து குறுகிய அரசியல் நோக்கங்களுடன் செயற்படும் எந்த சக்தியாக இருந்தாலும் அதனை தோற்கடிக்க தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மக்கள் சுதந்திரமாக தனது பிரதிநிதிகளை தெரிவு செய்ய தேவையான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமல்லாது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டியது ஜனநாயகத்தை மதிக்கும் சகலரதும் கடமை என்பதால், அதற்கு எதிரான சக்திகளை தோற்கடிக்க ஜனநாயக அமைப்புகளுடன் ஒன்றாக இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg