Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டைப் படுகொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 09:09 GMT, Nov 23, 2017 | Published: 09:05 GMT, Nov 23, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Elakkiya
DSC_0016

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கிராமத்தில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி பிரதேச மக்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரட்டைப் படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு சந்தேக நபருக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது என்று வலியுறுத்தினர்.

அதுமட்டுமின்றி, சந்தேக நபர்களில் ஒருவரான சில்வெஸ்டரின் வீட்டினை விற்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் பிரதேச மக்கள் அந்த வீட்டினை யாரும் வாங்கக் கூடாது என்றும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய மதுவந்தி பீதாம்பரம் மற்றும் 11 வயதுடைய அவருடைய மகன் பீதாம்பரம் மதுர்ஷன் ஆகிய இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.அத்துடன் அவர்களின் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டன.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

DSC_00102 DSC_00009 (1) DSC_00009

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg