Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படுவாரா?

In இலங்கை
Updated: 09:08 GMT, Nov 23, 2017 | Published: 09:08 GMT, Nov 23, 2017 |
0 Comments
1295
This post was written by : Vithushagan

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான  உத்தியோகபூர்வ அனுமதி   சட்ட மா அதிபரினால், பொலிஸ் மா அதிபருக்கு  வழங்கப்பட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபியை நவீனமயப்படுத்துவதற்காக 900 இலட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே, கோத்தபாயவை  கைது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தைக் கொண்டு டி.ஏ ராஜபக்ஸ சமாதி புனரமைக்கப்பட்டு அலங்காரப்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 250 இலட்ச ரூபா மீளச் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் கோதபாயவை கைது செய்ய வேண்டாம் என அரசாங்கத்திலுள்ள பலர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கொழும்புத் தகவல் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg