Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் சந்திப்பு!

In இலங்கை
Updated: 09:38 GMT, Nov 23, 2017 | Published: 09:34 GMT, Nov 23, 2017 |
0 Comments
1067
icon_com
This post was written by : Vithushagan
navy-army4

புதிய கடற்படை தளபதியாக  பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (வியாழக்கிழமை) விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட கடற்படை தளபதி விமானப்படையினரால் விசேட மரியாதை அளித்து வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் புதிய கடற்படை தளபதிக்கு விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் எதிர்கால கடற்படை நடவடிக்கைகளுக்கு விமானப்படையின் ஒத்துழைப்பைவழங்குவதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் விமானப்படை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

புதிய கடற்படை தளபதியாக சிரிமேவன் ரணசிங்க பதவியேற்றதை தொடர்ந்து விமானப்படை தளபதியைசந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன் குறித்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் இருதரப்பினரிடையே நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 5

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg