Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய சமாதானத்திற்கான திட்டத்தை வெளியிட்டார் புடின்

In உலகம்
Updated: 09:49 GMT, Nov 23, 2017 | Published: 09:48 GMT, Nov 23, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Risha
putin

சிரியாவில் நீடித்துவரும் ஆறு ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான சிரிய சமாதான மாநாட்டிற்கான திட்டங்களை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ஆகியோருடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அதன்படி, நடைபெறவுள்ள சிரிய சமாதான மாநாட்டில், சிரிய அரசாங்கத்தினதும், எதிர்க்கட்சியினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பு அவசியம் என கூட்டாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கருங்கடலோரம் அமைந்துள்ள சோச்சி நகரில் குறித்த சமாதான மாநாடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான திகதி அதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியை, ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுத்தும் என்றும் புடின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg