Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆவா குழு முக்கியஸ்தர் ‘சின்னா’ கைது!

In இலங்கை
Updated: 11:39 GMT, Nov 23, 2017 | Published: 11:39 GMT, Nov 23, 2017 |
0 Comments
1400
This post was written by : Varshini

ஆவா குழுவின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான சின்னா என்பரை கைதுசெய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்னா என அழைக்கப்படும் ரவிகிருஷ்ணா (வயது – 23) என்ற இந்த இளைஞன், இன்று (வியாழக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், சுதுமலை அம்மன் கோயிலுக்கு அருகில் நிற்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரை கைதுசெய்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருவதாக குறிப்பிடும் மானிப்பாய் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg