Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் பாரிய தொகை கஞ்சா அழிப்பு!

In இலங்கை
Published: 11:55 GMT, Nov 23, 2017 |
0 Comments
2298
icon_com
This post was written by : Varshini

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருள், இன்று (வியாழக்கிழமை) தீயிட்டு அழிக்கப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் ஆகியோர் முன்னிலையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட குறித்த கஞ்சா போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் முடிவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இவை தீயிட்டு அழிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில், குறிப்பாக கடற்பகுதிகளில் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. கடல் மார்க்கமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இவை இலங்கைக்குள் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

cannabis distroyed (2) cannabis distroyed (4) cannabis distroyed (1) cannabis distroyed (5)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg