Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர்கொழும்பு மீனவருக்கு கடலில் கிடைத்த அதிஸ்டம்!

In இலங்கை
Published: 12:26 GMT, Nov 23, 2017 |
0 Comments
4864
icon_com
This post was written by : Vithushagan
289ab74401e9fa77252d5fed6dbc9ddc_XL

நீர் நீர்கொழும்பு மங்குளி கடற்பகுதியில் புளுபின் ரூனா (Bluefin Tune) என்ற அரியவகை மீன் இனமொன்று  மீனவர் ஒருவரின் வலையில் சிக்கியுள்ளது. இவ்வாறு பிடிபட்ட  மீனின் சந்தைப்பெறுமதி 2 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பெரும்பாலும் பிடிக்கப்படும் இவ்வாறான மீன் விசேடமாக எலோவின் ரூனா என அடையாளம் காணப்படுகின்றது. புளுபின் ரூனா என்ற மிக அரிதான மீன் வகையாகும். இது சுவையானதாகவும் சிறந்த மீன் உணவாகவும் கருதப்படுகின்றது.இந்த மீன் கடலின் கரையோரப்பகுதியிலேயே பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் பிடிக்கப்பட்டவுடன் இதனை கொள்வனவு செய்வதற்கு கடலுக்குள் பலர் பிரவேசித்துள்ளனர். பொதுவாக இலங்கை கடல் வலயத்தில் காண்பதற்கு மிக அரிதாக இருக்கும் இவ்வாறான மீன் நியூசிலாந்து அட்லான்டிக் சமுத்திரம் மற்றும் கருங்கடல் பகுதியிலேயே காணப்படுவது விசேடஅம்சமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg