Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய கொடி விவகாரம்: சி.வி.யை விளக்கமளிக்குமாறு குரே கோரிக்கை!

In இலங்கை
Published: 12:30 GMT, Nov 23, 2017 |
0 Comments
1206
icon_com
This post was written by : Varshini
CV-RC-02

வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை புறக்கணித்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார்;.

தேசிய கொடி விவகாரம் தென்னிலங்கையில் பல சர்ச்சைகளை தொடர்ந்தும் எழுப்பி வருகின்ற நிலையில், வடக்கு அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு இன்று (வியாழக்கிழமை) கடிதம் மூலம் கோரியுள்ளார்.

முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர், இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இந்நிலையில், அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசிய கொடி தொடர்பில் சர்வேஸ்வரன் நடந்துகொண்ட விதம் தொடர்பாக விளக்குமாறு குறித்த கடிதத்தில் கோரியுள்ளார்.

அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடியை புறக்கணித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற நிலையில், தாம் அவ்வாறு செயற்படவில்லை என்றும், அதற்கு கொடுக்க வேண்டி மரியாதை அனைத்தையும் கொடுத்துள்ளதாகவும், வேண்டுமென்றே சிலர் இதனை தவறாக சித்தரிப்பதாகவும் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg