Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லங்காஷயரில் வெள்ளப்பெருக்கு: 70 பேர் மீட்பு

In
Updated: 12:40 GMT, Nov 23, 2017 | Published: 12:40 GMT, Nov 23, 2017 |
0 Comments
1249
This post was written by : Risha

பிரித்தானியாவில் மோசமான காலநிலை நிலவிவருகின்ற நிலையில், லங்காஷயரில் வெள்ளத்தில் சிக்கிய 70இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

லங்காஷயர் மற்றும் கல்கேட் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து அவசர பிரிவினருக்கு 500இற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக வடக்கு வேல்ஸில் வீதிகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் என்பன நீரில் மூழ்கிய நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு வேல்ஸில் எட்டு பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, ரயில்களை குறைந்த வேகத்தில் பயணிக்குமாறும் ரயில் சாரதிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

flood

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg