Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் தினத்தை முன்னிட்டு லண்டனில் இரத்ததான முகாம்

In
Updated: 15:28 GMT, Nov 23, 2017 | Published: 12:57 GMT, Nov 23, 2017 |
0 Comments
1210
This post was written by : Risha

மாவீரர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் நடைபெற்ற இரத்ததான முகாமில், பிரித்தானியா வாழ் ஈழத் தமிழர்கள் பலரும் கலந்துக் கொண்டு, ரத்த தானம் செய்து தங்களது தியாக உணர்வை வெளிப்படுத்தினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர்களின் குடும்பநல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் குறித்த  இரத்ததான  முகாம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றிருந்தது.

தேச விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட இந்த  இரத்ததான முகாமில் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த இரத்த கொடை முகாமானது, பிரித்தானியாவாழ் தமிழர்களின் ஈழப்பற்றையும், தியாக உணர்வையும் எடுத்து இயம்பும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-e3adf912a0170ff7efd227da2d943cd4-V

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg