Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடன் தீர்க்க முடியாநிலைச் சட்டத்தை மாற்றியமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

In இந்தியா
Published: 13:01 GMT, Nov 23, 2017 |
0 Comments
1183
icon_com
This post was written by : Varshini

கடன் தீர்க்க முடியாநிலைச் சட்டத்தை மாற்றும் வகையில் விரைவில் அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தில்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனைத் தெரிவித்தார்.

தனிநபர் அல்லது நிறுவனம், கடன் தீர்க்க முடியாநிலையில் உள்ளதை அறிவிப்பதற்கான விதிகள் இந்த அவசர சட்டத்தில் திருத்தப்படவுள்ளன. மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இது தொடர்பான முழுமையான விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக, கடன் தீர்க்க முடியாநிலைச் சட்டத்தை திருத்துவது குறித்து பரிந்துரைகளை அளிக்க, நிறுவனங்கள் விவகாரத்துறை செயலாளர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg