Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொக்கட்டிச்சோலை இளைஞன் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

In இலங்கை
Published: 13:07 GMT, Nov 23, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Varshini
remand

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலையுண்ட இளைஞனின் உடலில் பல காயங்கள் காணப்பட்ட நிலையில், வைத்திய அறிக்கையை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை நீலண்டமடு பகுதியில் நேற்று முன்தினம் 18 வயதான இளைஞன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்பிரதேசத்தில் ஏற்பட்ட சண்டை ஒன்றை தடுக்கச் சென்ற போதே, இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. இதன்போது, மற்றுமொரு இளைஞனும் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg