Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியா நெருக்கடி: மியன்மார்- பங்களாதேஷ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

In உலகம்
Updated: 13:15 GMT, Nov 23, 2017 | Published: 13:11 GMT, Nov 23, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Risha
Rohi

மியன்மாருடன், ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பான உடன்படிக்கையொன்றில் பங்களாதேஷ் கையொப்பம் இட்டுள்ளது.

ராணுவ ஒடுக்குமுறையின்போது பங்களாதேஷில் தஞ்சம் புகுந்த நூறாயிரக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான உடன்படிக்கையொன்றே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மியன்மார் தலைநகரில் இருநாட்டு அதிகாரிகளினால் இன்று (வியாழக்கிழமை) குறித்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

குறித்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

நாட்டைவிட்டு வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களை வெகுவிரைவில் மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்க தயாராக இருப்பதாக மியன்மார் அறிவித்துள்ள நிலையில், ரோஹிங்கியா நெருக்கடியை தீரப்பதற்கான முதல் படி இதுவென பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரின் ராகின் மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வன்முறை வெடித்து வந்த நிலையில், இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg