Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலை சீருடைக்கான கொடுப்பனவு பத்திரம் சரியான முறையில் வழங்கப்படும்: கல்வி அமைச்சர்

In இலங்கை
Published: 13:41 GMT, Nov 23, 2017 |
0 Comments
1105
icon_com
This post was written by : Vithushagan
akila

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை பெறுக்கொள்வதற்கான  கொடுப்பனவு பத்திரம்  இம்முறையும் சரியான முறையில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சீருடைகளுக்கான கொடுப்பனவு பத்திரங்கள்  பாடசாலைகளுக்கு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த கருத்துக்கு விடையளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவு பத்திரம் அச்சிடும் வேளைகளில் ஒரு பகுதி நிறைவடைந்திருப்பதாகவும்,  அவை சரியான காலப்பகுதிக்குள் வழங்கப்படும் எனவும், பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொடுப்பனவு பத்திரங்கள் விநியோகிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2018ஆம் ஆண்டில் 2 இலட்சம்  பேட் (TAB ) உபகரணங்கள் பாடசாலைகளுக்கு வழங்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg