Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதர்வா படத்தில் கல்லூரி மாணவியாக மேகா ஆகாஷ்!

In சினிமா
Updated: 16:22 GMT, Nov 23, 2017 | Published: 16:22 GMT, Nov 23, 2017 |
0 Comments
1336
This post was written by : Puvanes

இவன் தந்திரன் திரைப்படத்தினை இயக்கிய கண்ணன் அதர்வாவை வைத்து அடுத்த படத்தினை இயக்கவுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் ஒரு ‘பக்கக் கதை’ மற்றும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே குறித்த இரு திரைப்படங்களும் முடிவடைந்துள்ள நிலையிலும் காரணங்கள் வெளிப்படுத்தப்படாமல் முடங்கியுள்ளன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மேகாவிற்கு அதர்வா படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுவரையிலும் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மாத்திரம் நடித்துள்ள மேகா ஆகாஷ் தமிழ் சினிமா தரப்பில் ஏராளமான ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளார்.

எனினும் நடித்த இரு தமிழ் படங்களும் திரைக்கு வராமல் முடங்கியுள்ள நிலையில் தனது அதிஸ்டம் குறித்து இது வரையிலும் சந்தேகத்திலேயே அவர் இருந்து வந்தார்.

தற்போது முன்னணி நடிகரான அதர்வாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை முன்னிட்டு மேகா மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்க மேகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg