Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் நாட்டின் அடுத்த தலைவியாக நயன்தாரா? – அதிர்ச்சியில் நடிகர்கள்!

In சினிமா
Updated: 16:50 GMT, Nov 23, 2017 | Published: 16:50 GMT, Nov 23, 2017 |
0 Comments
1674
This post was written by : Puvanes

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவுள்ள நயன்தாரா அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றாரா என்ற சந்தேகங்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அறம் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததோடு பல்வேறுபட்ட பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டது.

எனினும் குறித்த திரைப்படமானது அரசியலை நேரடியாக எதிர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அத்தோடு படம் வெளிவந்த மறுதினம் கேரளாவின் ஊடகம் ஒன்று “நயன்தாராவை தமிழ்நாட்டின் தலைவியாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்” என்ற செய்தியினை பகிரங்கமாகவே வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா அரசியலில் பிரவேசிக்கப்போவதாக பல்வேறு வகையான செய்திகள் வெளிவந்தமுள்ளன.

தமிழ்நாட்டின் அம்மாவாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக சினிமாத்தரப்பில் உள்ள பிரபலங்கள் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் நயன்தாரா இணைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால் முன்னணி நடிகர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg