Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பசில் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் ஆரம்பம்!

In இலங்கை
Updated: 17:14 GMT, Nov 23, 2017 | Published: 17:14 GMT, Nov 23, 2017 |
0 Comments
1247
This post was written by : Puvanes

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அரசு நிதியினை முறைகேடாக பயன்படுத்தி சொகுசு மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பசில் மல்வானை பகுதியில் 16 ஏக்கர் நிலப்பரப்பிலான காணி ஒன்றினில் சுமார் 28 கோடியே 80 இலட்சங்கள் அரசாங்க நிதியினை ஊழல் செய்து சொகுசு மாளிகை ஒன்றினை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபரினால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதமும், மே மாதமும் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அண்மையில் கைது உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் தலையீட்டினால் குறித்த கைது நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய தென்னிலங்கை அரசியல் சூழலின் நல்லாட்சிக்கு ராஜபக்ஷ தரப்பினர் தொடர்ந்தும் இக்கட்டுகளைக் கொடுத்து வருவதால் அவர்களை முடக்கும் செயற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளதாக ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg