Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவுடனான உறவுகள் வலுப்படுத்தப்படும்! – ரணில் உறுதி

In இலங்கை
Published: 17:36 GMT, Nov 23, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Puvanes

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டு செயற்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பாரதப் பிரதமரிடம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நான்கு நாட்கள் இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புது டில்லியில் இன்று (வியாழக்கிழமை) சந்தித்துள்ளார்.

இதன்போது இரு தரப்பு உறவு மற்றும் கடல்சார் பாதுகாப்பு, மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கலந்துரையாடல் சந்திப்பின்போதே ரணில் விக்ரமசிங்க, மோடியிடம் மேற்குறித்த உறுதியினை வழங்கியுள்ளார்.

தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை ஆரம்பிப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலின் போது மத்தள சர்வதேச விமான நிலையத்தினை இந்தியா கையேற்பது குறித்த முன்மொழிவுகள் இந்தியா சார்பில் முன்வைக்கப்பட்டு ஆலோசனைகள் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg