Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டபாயவை கைது செய்ய உத்தரவிட்டது யார்? – அனைத்தும் போலி நாடகங்கள்!!

In இலங்கை
Published: 18:16 GMT, Nov 23, 2017 |
0 Comments
1900
icon_com
This post was written by : Puvanes
gota002

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய தான் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

டி.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபியை நவீனமயப்படுத்துவதற்காக 900 இலட்சம் ரூபா மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கோட்டாபய மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கோட்டாபய தரப்பினரிடம் நிதி மோசடி விசாரணைப்பிரிவு விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், கோட்டாபயவை கைது செய்வதற்கான உத்தியோக பூர்வ அனுமதி சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டது.

எனினும் கோட்டாபயவை கைது செய்யக் கூடாது என பல்வேறு மட்டங்களில் இருந்தும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

குறித்த கைது விடயம் தொடர்பில் இன்னைய தினம் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியைச் சந்தித்து விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும், நீதி மன்றம் மற்றும் பாதுகாப்புத் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தான் தலையிடுவது இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரையும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவினை யார் வழங்கியது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சந்திப்பின் போது சுதந்திரக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியிடம், சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதியுடனான விஷேட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்ட சுதந்திரக் கட்சியின் பிரதானிகள், எதிர்வரும் தேர்தலில் மஹிந்த அணியினரை இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து கோட்டாபயவிற்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது ஜனாதிபதியால் தடுக்கப்பட்டது என்ற செய்திகளும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் சுதந்திரக் கட்சியில் மஹிந்த அணியினரை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயிலும் ராஜபக்ஷர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் நட்புறவுடனேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர், தமக்கு எதிராக யாராவது கட்சியை உருவாக்குவார்களாக இருந்தால் அவர்களுடைய இரகசியங்களை அம்பலமாக்கி வீதியில் அழையவிடுவதாக மேடையில் பகிரங்கமாக ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

குறித்த எச்சரிக்கையானது மஹிந்த தரப்பினருக்காகவே கூறப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிந்த போதிலும் ஜனாதிபதி இன்று வரை எந்தவொரு இரகசியத்தையும் வெளிவிடவில்லை.

அதே சமயம் ஆட்சிக்கு எதிராக பல இக்கட்டுகளை மஹிந்த அணியினர் கொடுத்து வரும் போதிலும் அவர்களை காப்பாற்றும் செயல்களிலேயே தொடர்ந்தும் ஜனாதிபதி ஈடுபட்டு வருவதாகவும் இதனால் அனைத்தும் கண்துடைப்பு நாடகமா என்ற சந்தேகத்தையும் அரசியல் அவதானிகள் எழுப்பியுள்ளனர்.

எவ்வாறாயினும் மஹிந்தவிற்கு ஜனாதிபதி நெருக்கடிகளைக் கொடுப்பாராயின் அது நாட்டுக்கும், அவருடைய ஆட்சிக்கும் நெருக்கடிகளை உண்டு பண்ணும் விடயமாக மாற்றமடையும் என்பதன் காரணமாகவே ஜனாதிபதி பொறுமையாக இருப்பதாகவும் ஒரு சில அரசியல் அவதானிகள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg