Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாண சபையில் மாவீரர் தின அஞ்சலிக்கு மறுப்பு!

In இலங்கை
Updated: 03:44 GMT, Nov 24, 2017 | Published: 03:44 GMT, Nov 24, 2017 |
0 Comments
1187
This post was written by : Risha

வடமாகாண சபையில் மாவீரர்களை நினைவுகூறுவதற்கு அவைத் தலைவரினால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நேற்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மாவீரர்களை நினைவுகூர அனுமதி கோரப்பட்ட நிலையிலேயே அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சபை ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மாவீரர்களுக்கு இரண்டு நிமின மௌன அஞ்சலி செலுத்துவோம் என ஆளும் கட்சி உறுப்பினர் இ.ஆர்னல்ட் கோரியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர் மாவீரர் நாள் அன்று எல்லோரும் தனித்தனியாகவும் கட்சி சார்பாகவும் அஞ்சலி செலுத்த தானே போகின்றோம். எனவே இன்றைக்கு அது தேவையில்லை என தெரிவித்து சபையை ஒத்திவைத்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் மாவீரர் வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலும் இல்லங்கள், மாவீரர்கள் நினைவிடங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg