Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஷஸ் தொடர்- இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நிறைவடைந்தது

In கிாிக்கட்
Published: 05:30 GMT, Nov 24, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Sujitharan
269930

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நிறைவிற்கு வந்துள்ளது.

தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 116.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து இன்றைய தினம் தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.

இன்றைய நாள் ஆட்டத்தில் மேலதிகமாக 106 ஓட்டங்களைப் பெற்ற அந்த அணி எஞ்சியிருந்த 6 விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் ஜேம்ஸ் வின்ஸ் 83 ஒட்டங்களையும், டாவித் மலன் 56 ஓட்டங்களையும், மார்க் ஸ்டோன்மேன் 53 ஒட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா  3 விக்கட்டுக்களையும், லியோன் இரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg