Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலிவூட் – கிரிக்கட் சங்கமம்!  சாகரிகாவை கரம்பிடித்தார் சயீர் கான்

In கிாிக்கட்
Updated: 06:23 GMT, Nov 24, 2017 | Published: 06:23 GMT, Nov 24, 2017 |
0 Comments
1531
This post was written by : Sujitharan

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சயீர் கான், தன் காதலியான பாலிவுட் நடிகை சாகரிகா கட்ஜை, நேற்று (வியாழக்கிழமை) பதிவு திருமணம் செய்துகொண்டார்.

ஷாருக் கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான “ஹசக் தே இந்தியா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார் சாகரிகா. அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து, பாலிவுட் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

இந்த பதிவுத் திருமணத்தில் ஒரு சில உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

எனினும் எதிர்வரும் 27 ஆம் திகதி பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும், இதில் கிரிக்கட் வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg