Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் திகதி அறிவிப்பில் சந்தேகம் உள்ளது: கனிமொழி தெரிவிப்பு!

In இந்தியா
Updated: 16:24 GMT, Nov 24, 2017 | Published: 09:42 GMT, Nov 24, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Kemasiya
Kanimoli

எடப்பாடி அணிக்கு சின்னம் வழங்கப்பட்டமை, அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செய்தியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

ஆர்.கே.நகர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து, கட்சியின் தலைமை முடிவெடுக்கும். இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்பது உறுதி.

இந் நிலையில், இரட்டை இலைச்சின்னத்தை தமிழக அரசாங்கத்தின் கையில் வழங்கிய தேர்தல் ஆணையகம், மறு நாள் ஆர்.கே.நகர் தேர்தல் திகதியை அறிவித்துள்ளமை, பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg