Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படும் பிந்து மாதவி!

In சினிமா
Updated: 10:11 GMT, Nov 24, 2017 | Published: 10:11 GMT, Nov 24, 2017 |
0 Comments
1191
This post was written by : Vithushagan

எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தெரிவு செய்வதில் கவனமாக இருக்கிறேன் என நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார்.

‘புகழேந்தி எனும் நான்’ எனும் நாயகிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் பிந்து மாதவி நாயகியாக நடிக்கவுள்ளார், இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன்.

நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் ‘புகழேந்தி எனும் நான்’.

இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு.பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும்.

டிசம்பரில் தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg