Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – 205 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை

In கிாிக்கட்
Updated: 10:40 GMT, Nov 24, 2017 | Published: 10:25 GMT, Nov 24, 2017 |
0 Comments
1452
icon_com
This post was written by : Sujitharan
India-Vs-Sri-Lanka-2nd-Test-Nagpur-Tickets-24th-To-28th-November-2017

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது.

போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய அணியினரின் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் 205 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் 57 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 51 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில், அஸ்வின் 4 விக்கட்டுக்களை வீழ்த்த, ஜடோஜா, இஷாந்த சர்மா ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து இந்திய அணியினர் தங்கள் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg