Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசின் தீர்வு மக்களுக்கு போதாது: கலந்துரையாடலின் பின் சி.வி கருத்து

In இலங்கை
Updated: 15:23 GMT, Nov 24, 2017 | Published: 15:21 GMT, Nov 24, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பின் போது, அரசின் தீர்வு மக்களுக்கு போதாமை தொடர்பாக கருத்திற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) இருவருக்கும் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல் ரீதியாக சேர்ந்திருக்காவிட்டாலும், கொள்ளை ரீதியாக சில விடயங்களில் ஆராய வேண்டிய நிலை மற்றும் தற்போதைய அரசின் தீர்வு மக்களுக்கு போதாது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஆனால், அரசியல் ரீதியாக எதுவும் கலந்துரையாடவில்லை. இருவரும் மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் கொள்கை ரீதியான ஒருமைப்பாடு தொடர்பாக கலந்துரையாடினோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg