முல்லைத்தீவில் மீட்கப்பட்ட வெடி பொருள் செயலிழக்க செய்யப்பட்டது
This post was written by : Vithushagan

முல்லைத்தீவு உடையார்கட்டுப்பகுதியில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் இருந்து போர் ஆயுத உபகரணங்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், அவை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) செயலிழக்க செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய குறித்த ஆயுதக்கிடங்கு அதிரடிப்படையினரின் உதவியுடன் அகழப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கனரக ஆயுதங்கள், ரீ56 துப்பாக்கிகளின் உதிரிப்பாகங்களுடன் 27 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்படுகின்றது.