Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 16:43 GMT, Nov 24, 2017 | Published: 16:02 GMT, Nov 24, 2017 |
0 Comments
1641
icon_com
This post was written by : Vithushagan
unnamed

வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் வேளையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று பிற்பகல் 2மணியளவில் மாமடு குளத்தில் குளிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சென்று, குளத்தின் கரையிலிருந்து தண்ணீரை ஒருவர்மீது ஒருவர் தட்டித்தட்டி விளையாடியுள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் சிறுமி ஒருவரும் நீரில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் ஏனையவர்கள் கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துவந்து நீரில் மூழ்கியவர்களை தேடி மீட்டுள்ளனர். பின்னர் குறித்த இருவரையும் அருகிலுள்ள மாமடுவ வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அவசர சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இருவரும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதில் திருமணமாகி இரண்டு மாதம் நிறைவடைந்த ஜெயப்பிரதாப் (வயது -26) எனும் இளைஞரும் அவரது ஒன்றுவிட்ட சகோதரியான பானுரேகா (16வயது) என்ற சிறுமியுமே உயிரிழந்தவர்களாவர்.

குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg