Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல

In இலங்கை
Updated: 17:24 GMT, Nov 24, 2017 | Published: 17:06 GMT, Nov 24, 2017 |
0 Comments
1172
This post was written by : Vithushagan

தொழில் வாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்க்பபடும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற  உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகளை அடுத்த வருடத்திற்குள் தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழங்களில் உள்ள வாசிகசாலை, உணவுச்சாலை மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஐயாயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg