Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சியின் சின்னங்கள் வெற்றியை தீர்மானிக்காது: சீமான்

In இந்தியா
Updated: 05:17 GMT, Nov 25, 2017 | Published: 04:40 GMT, Nov 25, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Vithushagan
seeman-lawyers-protest

தேர்தல்களில் கட்சியின் சின்னங்கள் வெற்றியை தீர்மானிக்காது என தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சீமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி வாக்காளர்களை சந்திக்கும். எங்களது பலம் என்ன? என்பதை நிரூபிப்போம். இனி வரும் காலங்களில் சின்னங்கள் வெற்றியை தீர்மானிக்காது.

வேட்பாளர்களின் எண்ணங்களும், கருத்துக்களுமே வெற்றியை நிர்ணயிக்கும் காலம் நிச்சயம் வரும்.

நீண்ட காலமாக ஒரு கட்சியிலேயே இருப்பவர்களுக்கு மட்டுமே தங்கள் கட்சியின் சின்னம் வெற்றி சின்னமாக தெரியும். இதற்கு முன்னர் பிரபலமாக இருந்த எத்தனையோ சின்னங்கள் காணாமல் போய் இருக்கின்றன.

இளம் தலைமுறை வாக்காளர்கள் எதிர்காலத்தில் சின்னத்தை பார்த்து வாக்களிக்க மாட்டார்கள். இதற்கு முன்னர் கூட சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் மனதை பலர் கவர்ந்துள்ளனர்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சின்னம் கிடையாது. வேட்பாளர்களுக்கு எண்களே கொடுக்கப்படும். அங்கு வீடு வீடாக சென்று பிரசாரமும் செய்ய முடியாது.

வேட்பாளர்களின் பேச்சை கேட்டே வாக்களிக்கும் நிலை உள்ளது. அதுபோன்ற ஒரு மாற்றம் இங்கும் வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg