Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.மாகாணம் முழுவதும் இராணுவமயம்: சிவசக்தி ஆனந்தன்

In இலங்கை
Updated: 07:24 GMT, Nov 25, 2017 | Published: 04:54 GMT, Nov 25, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Ravivarman

ஐந்து சிவிலியன்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்ற விகிதத்தில் வடமாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் காணி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”யுத்தம் முடிந்து எட்டரை வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளபோதும் பெருமளவு இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டிருப்பதால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான விளைநிலங்களும், மேட்டுக்காணிகளும் அரசாங்கத்தின் துணையுடன் முப்படையினரானலும் கபளீகரம் செய்யப்படுகிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பின்னரும் காணிவிடுவிப்பதற்கான போராட்டங்கள் நடைபெறுகின்றதே தவிர, காணிகளை விடுவிப்பதற்கான எவ்வித எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை.

ஒரு பக்கம் சொற்பமான காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மறுபுறம் வேறு வழிகளில் காணிகளை சூறையாடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு-கிழக்கில் இராணுவமயமாக்கல் என்பது புதிய சிங்கள கொலனிகளைப் பாதுகாப்பதற்காகவும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே பயன்படுத்தப்படுகின்றது.

காணிகளை விடுவிக்கின்றோம், இராணுவத்தை குறைக்கின்றோம் என்று ஐ.நா. மனிதவுரிமை ஆணையகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் எல்லாம் போலி வாக்குறுதிகளாகவே உள்ளது.

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் இருந்த இடத்தை இராணுவத்தினருக்குக் கொடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. இதனை நிறுத்தி ஏற்றுமதி விவசாய உற்பத்தி மையமாக இதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள்.

இராணுவம் அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg